கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்: பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்ததால், போதைப் பொருள் கடத்தல் தலைதூக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தியாவிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவுக்கு விலை அதிகமாகும். இந்திய கஞ்சாவில் போதையும் அதிகம் உள்ளதால், ஒரு கிலோ இந்தியக் கஞ்சா, 1,10,000வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் கஞ்சா உற்பத்தி குறைந்து விட்டது என்ற நிலையில், இன்று இலங்கை கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை வரலாற்றில் அதிக போதைப்பொருள் பிடிப்பட்டது பொதுமக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 3