உலகக் கோப்பையை வெல்ல தோனி மட்டுமா காரணம்?: கெளதம் கம்பீர்

2011 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றில் தோனி அடித்த சிக்ஸரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. 2011 உலகக் கோப்பை என்றால் தோனி அடித்த சிக்ஸர் தான் என்பார்கள். ஏப்ரல்-2 2011அன்றுதான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இதனால் பிரபல கிரிக்கெட் இணையத்தளமான க்ரிக்இன்ஃபோ, தோனியின் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, இந்த ஷாட், மில்லியன் இந்திய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது என டுவிட் செய்துள்ளது.

இதைப்பற்றி பேசிய கெளதம் கம்பீர், இறுதிச்சுற்றில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தேன் எனினும் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்த தோனி ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அணியும் பயிற்சியாளர்களும் இணைந்துதான் உலகக் கோப்பையை வென்றார்கள். சிக்ஸர் மீதான உங்கள் விருப்பத்தைக் கைவிடவேண்டும் என்று கோபமாக பேசியுள்ளார். இதையடுத்து தோனியின் ரசிகர்கள் கம்பீரை இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 2 =