தூத்துக்குடியில், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

டெல்லியில் தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18பேர் பங்கேற்று திரும்பியுள்ளனர். இதில், ஒருவர் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததை அடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அதிரடியாகச் சென்று அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும், தூத்துக்குடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஊராட்சி அலுவலர்கள் உள்பட பல அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து, கிருமி நாசினி தெளித்தனர். மேலும், 17பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா சிறப்பு வார்டினை ஆய்வு செய்த, தூத்துக்குடி தொகுதி எம்பி., கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனி கட்டடிடம் ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தவர், பொதுமக்களும் அரசு 21 நாட்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ. 1000 நிவாரண உதவி தொகையை, ரூ. 5000 ஆக உயர்த்த வேண்டுமெனவும் அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருந்த நிலையில், ரூ.50,00,000
கொரோனா பணிகளுக்கு ஒதுக்கித் தருவதாக கூறியவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் இந்த சிறப்பு நிதியை அளிப்பதாக கடிதமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 − = 74