கொரோனா பரவும் மையமாக மாறிய டெல்லி மாநாடு!!

144 தடை உத்தரவினை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற டெல்லி நிஜாமுதீன் பகுதி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பலரும் ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளதால் அவர்களை கண்டறியும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், ரயில்வேயில் அவர்களுடன் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. கடந்த, 8, 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர் பங்கேற்றனர். இதயடுத்து, டெல்லியிலிருந்து சென்ற தூரந்தோ எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ராஜதானி எக்ஸ்பிரஸ், சம்பந்த் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ரயில்களின் அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது. ஒவ்வொரு ரயிலிலும் சுமார் 1200 பயணிகள் பயணித்ததால், பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ராஜ்தானி எக்ஸ்பிரஸில், பயணித்த மலேசிய பெண்ணுக்கும், ஏபி சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணித்த இந்தோனேஷிய பயணிகள் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் கொரோனா பாதித்த முதல் பெண்ணும், ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =