அம்மா உணவகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. தொடர்ந்து தமிழகத்தில் 31-ம் தேதி வரை அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பால், காய்கறிகள், குடிநீர்,மருந்து, உணவு பொருட்கள், பெட்ரோல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கிடைக்கவும், அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்ற முதல்வர், அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்றும், உணவின் தரம், சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறாதா? உணவகத்தில் உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். பொங்கல் வாங்கி சாப்பிட்டு உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை கலங்கரை விளக்கம் அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். 200க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 + = 52