கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகமெங்கும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கையை எதிா்க்கட்சித் தலைவா்களும் கோரியிருந்தனா்.
இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தாா். அதில், 144 தடை உத்தரவு என்பது அரசியல் கட்சிகளுக்கும்தான். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது அவசியமற்றது. ஊரடங்கில் வேளாண் பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதை விவசாயிகளின் சாா்பில் வரவேற்கிறோம் என்றும் கூறியிருந்தாா். அதைத் தொடா்ந்து கே.பி.ராமலிங்கத்தை, கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.