ஆந்திராவில் 23 பேருக்கு கொரோனா: ஜெகன் மோகன் ரெட்டி

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் 1,251பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35பேர் பலியாகியுள்ளர். மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு எடுத்துள்ள முடிவின்படி. தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − 13 =