ரத்தாகும் விம்பிள்டன்: அதிர்ச்சியில் டென்னிஸ் வீரர்கள்.

ஆண்டுதோறும் பிரிட்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் உலகப் புகழ் பெற்றது. கொரோனா காரணமாக தற்போது விம்பிள்டன் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடுத்த புதனன்று நடக்கவுள்ள கூட்டத்தில் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் பல நாட்டு வீரர்கள் பிரிட்டன் வந்து சேருவது சாத்தியமற்றது. எனவே விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =