கோவையில் பசி போக்கும் தன்னார்வ அமைப்புகள்

கோவையில் ஆதரவற்றோர்களுக்கு அன்பு கலந்து உணவு பரிமாறும் பணியில் சக்தி சேனா அமைப்பு சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறது.

கொரானா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவையில் இருத்த பலர் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆதரவற்றோர்களு க்கான நிலையோ இன்னும் பரிதாபம் இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆதரவற்றோர்களுக்கு உதவும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.

அதன்படி சக்திசேனா அமைப்பு கோவையில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தடையுத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு 100 பேர் வீதம் ஆயிரக்கணக்கானோரின் பசியை இவ்வமைப்பு தீர்த்து வருகிறது. இதனால் ஆதரவற்றோர் பலர் தங்களுக்கான உணவு தேவையை எண்ணி கவலையடையாமல் நிம்மதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − 25 =