நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலாமானார்

பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார்

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார்.

 80 படங்கள் வரை நடித்த அவர், 83 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 + = 77