3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. செலுத்த தேவை இல்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

The Secretary, Department of Economic Affairs, Shri Shaktikanta Das addressing a press conference, in New Delhi on December 15, 2016.

கடன்களுக்கான மாத தவணைகளை ( இ.எம் .ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தனிநபர்கள், பொது நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. தொழில்கள் முடக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார அளவில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வங்கி டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 4 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =