புதுக்கோட்டை நகரில் மேலும் 3 இடங்களில் உழவர்சந்தை : 1 மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லவும் : மாவட்ட கலெக்டர்

புதுக்கோட்டை நகரில் உழவர்சந்தையில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் இடங்களில் உழவர்சந்தை இயங்க உள்ளது என்றும் பொதுமக்கள்  1 மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி மற்றும் விராலிமலை ஆகிய 6 இடங்களில் உழவர்சந்தைகள் இயங்கி வருகிறதுதற்பொழுது கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை உழவர்சந்தையில் கூட்ட நெருக்கடியினை தவிர்ப்பதற்காக புதுக்கோட்டையில் இயங்கி வரும் உழவர்சந்தையினை மேலும் மூன்று இடங்களில் கூடுதலாக பிரித்து, ஏற்கனவே இயங்கி வரும் உழவர்சந்தை நீங்கலாக, புதுக்கோட்டை நகரில் கூடுதலாக கே.கே.சி எதிரில் தற்காலிக பேருந்து நிலையம், மேன்மை தங்கிய மன்னர் கல்லூரி மைதானம் மற்றும் பேராங்குளம் அருகில் உள்ள அய்யனார் திடலில் உழவர்சந்தையின் பிரிவுகள் 27.3.2020 முதல் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதர இடங்களான அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி மற்றும் விராலிமலையில் உழவர்சந்தை தொடர்ந்து இயங்கும்எனவே, நுகர்வோர் அனைவரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் ஆங்காங்கே செயல்படும் உழவர்சந்தைகளில் 1 மீட்டர் இடைவெளியில் நின்று  காய்கறிகளை வாங்கி செல்லலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =