நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

சென்னை: நடிகரும், டாக்டருமான சேதுராமன் நேற்று(மார்ச் 26) இரவு மாரடைப்பால் காலமானார்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் தோல் சிகிச்சை டாக்டருமான சேதுராமன், ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சினிமாவிலும் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இளம் வயதிலேயே நேற்று(மார்ச் 26) அவர் மாரடைப்பால் காலமானார். இது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சேதுராமன் இறந்ததை நடிகர் சதீஷ், தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 16