தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி : எண்ணிக்கை 35 ஆக உயர்வு

  தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின்  எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டத்தைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 23 =