50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஓய்வு: சென்னை இணை ஆணையர்

கொரோனாவால் உலகம் முழுவதும் 192 நாடுகளில் 4,22,566க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உலகளவில் 21,200 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 12 பேர் பலியாகியுள்ளனர், 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற விஷயங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் நாடு முழுவதும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழக காவல்துறையில் 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஓய்வு வழங்க சென்னை இணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். நீரிழிவு, சர்க்கரை, உயர் அழுத்த இரத்தம் உட்பட எந்த நோயால் பாதிக்கப்பட்டவராக இந்தாலும் ஓய்வெடுக்க உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பில் உள்ள காவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 50 = 60