வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கூடுகிறது ஜி – 20 கூட்டம்: கொரோனா தடுக்க முடிவுகள் எடுக்கப்படுமா??

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சார்க் நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி – 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, தலைமை பொறுப்பிலுள்ள சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்தது. ஜி – 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

சவுதி அரேபியாவின் இளவரசர், முகமது பின் சல்மான் அழைப்பை ஏற்று, ஜி – 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தய உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − = 56