மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமிலிருந்து தப்பி ஓடிய வாலிபர் : காதலி வீட்டில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை

மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய வாலிபரை அவரது காதலி வீட்டில் போலீசார் பிடித்துள்ளனர்.

துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த வாலிபர் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண சினிமா பாணியில் முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது.சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து மதுரைக்கு கொண்டு சென்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1