புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 202 நபர்கள்மீது வழக்கு : 126 வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறி வீதிகளில்  இன்று காலை 6 மணிவரை இரு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த 202 நபர்கள் மீது 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்களின் 126 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடா்ந்து புதுக்கோட்டையில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தடை உத்தரவைப் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட எல்லைகளில் 14 இடங்களிலும், மாவட்டத்துக்குள் காவல்நிலையங்களின் எல்லைகளுக்குள் 38 இடங்களிலும், சுங்கச்சாவடிகளில் 4 இடங்களிலும் என மொத்தம் 56 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இவை தவிர்த்து காவல்துறையினா் பல இடங்களில் சுற்றித் திரிந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இவ்வாறாக இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் 126 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இந்த வாகன ஓட்டிகள் மீது  93 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவை அமலாக்கும் வகையிலான வாகனத் தணிக்கை விடியவிடிய தொடரும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 79 = 86