புதுக்கோட்டை அருகே 720 மதுப்பாட்டில்கள் கடத்திய நபர் கைது

புதுக்கோட்டை அருகே உள்ள கறம்பக்குடி பகுதியில்  சரக்கு  ஆட்டோவில் சட்டவிரோதமாக 720 மது பாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மேலத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பாண் டியராஜன் (35). இவர் கறம்பக்குடி அருகேயுள்ள புதுப்பட்டி டாஸ்மாக் கடையிலிருந்து தனது சரக்கு ஆட்டோ வாகனத்தில் 720 மது பாட்டில்களை  வாங்கி சட்டவிரோதமாக கடத்திச் சென்றார்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கறம்பக்குடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் தலைமையிலான  போலீஸார் புதுப்பட்டி கறம்பக்குடி இடையில் உள்ள பெரியாறு பாலத்தில் வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில் பாண்டியராஜன் கொண்டு வந்த720 மது பாட்டில்களுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 கறம்பக் குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பாண்டியராஜனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவால்  மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக  வாங்கிக் கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டார்.. 

பின்னர் இது குறித்து வழக்கப்பதிவு செய்த கறம்பக்குடி போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாண்டியராஜனை ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − 44 =