புதுக்கோட்டையில் முகக் கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்ட மணமக்கள்

புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளத்தில்  கரோனோ வைரஸ் காய்ச்சல்  தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக மணமக்கள் முகக் கவசம் அணிந்து  இன்று திருமணம் செய்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று நடைபெற இருந்த திருமணங்கள் மிக எளிமையான முறையில் மிக சொற்ப எண்ணிக்கையிலான உறவினர்களுடன்  நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் அரங்குளநாதர் கோவிலில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இரண்டு ஜோடியினர் இன்று முகக் கவசம் அணிந்து திருமணம் செய்துகொண்டனர். கோயிலில் புரோகிதர் இல்லாத நிலையில் தாங்களாகவே இறைவனின் சன்னதி முன்பு நின்று மாலை மாற்றிக் கொண்டு, மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்கள் மற்றும் வந்திருந்த மிகக் குறைந்த அளவிலான உறவினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தினர்.

 திருமணம் என்றாலே நண்பர்கள், உறவினர்கள், மேள தாளம், பட்டாசு, விருந்து என  ஊரே அமர்க்களப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பின் ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணங்கள் இன்று நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 7 = 10