நாடு முழுவதும் டோல் கட்டணம் தற்காலிக ரத்து: நிதின் கட்கரி டுவிட்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதயடுத்து, மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், அனைத்து டோல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அவசரகால சேவைகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமான நேரத்தையும் மிச்சப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − 52 =