தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர் நலம்: விஜயபாஸ்கர்

சென்னைக்கு, டெல்லியில் இருந்து ரயிலின் மூலம் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, ரயிலில் உடன் பயணம் செய்தவர்கள் உள்பட ஏராளமானோரை அரசு கண்காணித்து வந்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்த இரண்டாவது நபரான அந்த இளைஞர் குணமடைந்து வருவதாகவும், இருமுறை நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது உறுதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்னும் இரு நாட்களில் அந்த இளைஞர் வீடு திரும்பலாம் என்றும், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு இளைஞருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 8 = 15