கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை இன்றி வழக்கம் போல் செயல்படும்: வியாபாரிகள் கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதியளித்துள்ளதால், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் மார்க்கெட் செயல்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

94 − 92 =