கொரோனா சிகிச்சைக்கு சீனா புது முயற்சி..

கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். குணமடைந்தவரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் எனவும், அதனை கொண்டு மற்றவர்களை குணப்படுத்த உதவியாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படுவதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து வாஷிங்டன் மருத்துவ பல்கலைகழக டாக்டர் ஜாப்ரி ஹென்டர்சன், இது மிகப்பழங்கால நடைமுறைதான். பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன்தந்துள்ளது. ஆனால், இதே நடைமுறையிலான சிகிச்சை, கொரோனாவை குணப்படுத்த எந்தளவிற்கு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும், எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − 20 =