கொரோனா அச்சம்: கலை கட்டும் பனங்கல்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கழ்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி பனைமரத்தில் கல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு மடங்கு கல் உற்பத்தி செய்துக்கொண்டு 100 மடங்கு பவுடர் மூலம் தயாராகும் மதுபான கல்களை விற்று வருவதால் அங்கு குடிக்க வரும் மக்கள் வாந்தி பேதிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்குள்ள விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவும் 144 தடை உத்தரவும் இருக்கும் நிலையில் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் திரண்டு இந்த மதுபானத்தினை குடித்துவிட்டு வாந்திபேதி மயக்கத்தில் உலா வருவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதற்கு வாழப்பாடி காவல் துறையினரும் மாவட்ட காவல் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =