கொரேனா நடவடிக்கைகளுக்கு சோனியா வரவேற்பு: பிரமருக்கு கடிதம்

கொரேனா குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் அதில் 21 நாள் ஊரடங்குக்கு வரவேற்பு அளிப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும் எனவும் புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும், தீவர கண்காணிப்பு பிரிவுகள், சுவாசக் கருவிகள் அதிகளவில் தயார் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் விளைந்து நிற்கும் பயிர்களை அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும், விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூலிப்பதை 6 மாதங்கள் தள்ளி வைப்பதோடு, தவணைகளுக்கு வட்டியை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது குறித்து அரசு ஆலோசிக்கவும் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு தலா ரூ.7500 வீதம் நிவாரணம் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 49