கேரளாவில் ஹெச்ஐவி மருந்தால் கொரோனாவை வென்றவர்..!

கேரளாவின், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மூணாறுக்கு வந்திருந்த பிரிட்டனைச் சோ்ந்த 19 பேரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி முதல்வா் தாமஸ் மேத்யூ தலைமையிலான மருத்துவா்கள், அவருக்கு சிகிச்சை அளித்தனா்.

ஹெச்ஐவி நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரிடோனாவிா், லோபினாவிா் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த மருந்துகளை பொருத்தமான நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. அதன்படி அந்த நோயாளிக்கு 7 நாள்கள் ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின், அவருடைய ரத்த மாதிரிகளை மீண்டும் பரிசோதனை செய்ததில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கேரளத்தில் கொரோனா நோயாளிக்கு ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2