உலகளவில் 21 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்..!!

அமெரிக்காவில் நேற்று மட்டும் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கப்பட்டு, 944 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் , புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ளது. ஸ்பெயினில் புதிதாக 7,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,647 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 468,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 114,218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2