இந்தியளவில் கொரோனாக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு: பாதிப்பு 640-ஐ தாண்டியது

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 12 பேர் பலியான நிலையில், மேலும் இருவர் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த பெண் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து கடந்த 3-ம் தேதி இந்தியா திரும்பிய ஜெகன்(40) என்பவர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெகன் பற்றிய ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. பரிசோதனை முடிவு வந்த பிறகே ஜெகன் உயிரிழந்துள்ளது கொரோனா பாதிப்பாலா என்பது தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =