இத்தாலியில் 7,503 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,386 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 7,503 ஆகவும் உயர்ந்துள்ளது, இதில் 9,362பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,472. நேற்று ஒரே நாளில் 261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,032பேர் உயர்ந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவமனைகள், போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்புக் கருவிகள் இல்லாமலும் திணறி வருகிறது. சில நோயாளிகள் படுக்கை வசதிக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும், காத்திருக்கும் நிலையிலேயே சிலர் மரணிக்கும் நிலையும் காணப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவும் நேரமின்றி, அவற்றை குளிர்பதனப் பெட்டிகளில் வைத்து அமெரிக்கா பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது.கொரோனா அவசர நிலை ஏற்படாது என்று அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததேக இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1