ஆலங்குடியில் குவிந்த ஆந்திர தொழிலாளர்கள் : கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் புகார் – அனைவரையும் தனிமைப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் அச்சத்தில் தவித்து வரும் நிலையில் ஆந்திர தொழிலாளர்கள் 60 பேர் திடீரென புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடி பகுதியில் வந்து இறங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தெட்சிணாபுரம்  பகுதியைச் சேர்ந்த காடையன்தோப்பு பாலாமணி, பாலசுப்பிரமணியன்,யோகேஸ்வரி ,கற்பக சுந்த ரி ஆகியோருக்கு சொந்தமான கரும்புத் தோட்டங்கள் உள்ளன. இதில் விளைந்த கரும்புகளை வெட்டுவதற்காக  ஆந்திர எல்லைப் பகுதியான திருத்தணியில் இருந்து 20 குடும்பத்தை சேர் ந்த 17 குழந்தைகள் உள்பட 59 பேர் காடையன் தோப்பு ஆதி திராவிடர் காலனி பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

குரும்பூர்  தனியார் சர்க்கரை ஆலையின் மேற்பார்வையாளர் செல்வத்தின் மூலமாக இத்தொழிலாளர்கள் லாரி மூலம்வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் மொழி பேசாமல் வேற்று மொழி பேசுபவர்கள். இதனால் கொரோனா பீதியில் இருந்து கொண்டிருக்கும் அங்கு வசிக்கும் கிராமப் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

144 ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும்போது இவர்கள்  எப்படி வந்தார்கள் எனத் திகைத்த அப்பகுதி மக்கள் கோவிலூர் கிராம நிர் வாக அலுவலர் விஜய்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர் உடனே ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை உடன் ஆந்திர தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்..

இது தொடர்பாக ஆலங்குடி தாசில்தார் கலைமணிக்கும் கிராம நிர்வாக அலுவலர் விஜய்குமார் தகவல் கூறினார். தாசில்தார்  கலைமணி உடனே மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து  வெண்ணாவல்குடி அரசு ஆராம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார்,சுகாதார ஆய் வாளார்.விஸ்வநாதன் மற்றும் செவிலியர் பவுல்மேரி ஆகியோர் காடையன்தோப்பு ஆதிதிராவிடர் காலனிக்கு விரைந்து சென்று அங்கிருந்த ஆந்திர தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர்.சிலருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

விசாரணையில் குரும்பூர்  தனியார் சர்க்கரை ஆலையின் மேற்பார்வையாளார செல்வம் ஏற்பபாட்டில் ஆந்திர தொழிலாளர்கள் இங்கு கரும்பு வெட்ட வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து ஏப்ரல் 14 ம் தேதி வரை கொரோனா வைரஸ் காரணமாக 144தடைச்சட்டம் அமுலில் இருப்பதால்   ஆந்திர  தொழிலாளர்கள் அனைவரையும் குரும்பூர்  தனியார் சர்க்கரை ஆலையில் தனிமைப்படுத்தி வைக்க அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்குப் பின்னரே இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − = 59