அழிவின் விழிம்பில் உள்ளதா இத்தாலி.? 7 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி

சீனாவின் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 4,62,781 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 21ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், 3,28,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,13,802 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவை விட, இத்தாலியில் இந்த வைரஸின் பாதிப்பு இருமடங்காக உள்ளது. இத்தாலியில் இதுவரை 74,386 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =