1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறை மற்றும் ஆல் பாஸ்: நாராயணசாமி

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தது. பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, கொரோனாவுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்தி கொள்வதுதான். அதனால், முழுமையாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மக்களை இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன். பேரிடர் சட்டமும், தொற்று நோய் சட்டமும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதோடு ஒரு வருட தண்டனை கிடைக்கும். எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்தி கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறவிருந்தது. ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் முன்னதாக 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 9 வகுப்பு வரை அனைவரும் பாஸ் அறிவிக்க கல்வியாளர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 − 15 =