விழித்திரு..விலகியிரு..வீட்டிலிரு : மீறினால் கடும் நடவடிக்கை : முதல்வர் பழனிசாமி

கொரோனாவிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் விழித்திரு..விலகியிரு..வீட்டிலிரு என்பதை பின்பற்ற வேண்டும். மீறினால்  அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி  சற்றுமுன்  தொலைக்காட்சி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-

சாதி, மத, இன அரசியல்களுக்கு அப்பாற்பட்டு கொரோனாவை எதிர்த்து நிற்போம். பாதுகாப்பாக இருப்போம்.இந்த நடவடிக்கையை பின்பற்றாமல் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.விழித்திரு..விலகியிரு..வீட்டிலிரு.. என்பதைப் பின்பற்றுங்கள்.அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். சுய மருத்துவம் வேண்டாம்.
உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கு முக்கியமோ அதே போல ஒவ்வொரு தமிழகக் குடிமகனும் எங்களுக்கு முக்கியம்.இந்த 21 நாட்கள் விடுமுறைக் காலம் அல்ல. வெளியில் செல்வதைத் தவிருங்கள். ஏப்ரல் மாதத்துக்கான அத்யாவசிய பொருட்கள் இப்பொதே வழங்கப்படும்.

இந்த பணிகளுக்காக ரூ.3780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம். சமூக விலகலை கடைபிடியுங்கள். ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தை காப்போம் .

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 64 =