மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் : முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா??

இந்தியாவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், நம்மையும், நம் குடும்பத்தையும், நம் குழந்தைகளையும், நண்பர்களையும் பாதுகாக்கவும் கூறினார்.

அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்கு உதவ போலீசார் இருக்கிறார்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவே வீட்டிலேயே இருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரசாத் சங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாளை நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் கூட்டம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா நிவாண நிதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தனது மக்களவை தொகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரை அளிக்க மக்களுடன் இன்று மாலை 5 மணிக்கு காணோலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 70 = 71