தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கம்

2020-21 ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நீக்கமப்பட்டுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாப் டு பிளிஸ்சிஸ் தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடுவதால் ஒப்பந்தத்தில் நீடிக்கிறார். கேப்டன் குயின்டான் டி காக், பவுமா, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி உள்பட 16 பேர் ஒப்பந்த பட்டியலில் உள்ளனர். பெண்கள் ஒப்பந்த பிரிவில் திரிஷா செட்டி, மரிஜான் காப், டேன் வான் நீகெர்க் உள்பட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 66