திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை..!!

கொரோனா வைரசின் பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் நடவடிக்கைகளை மீறி இருசக்கர வாகனத்தில் பயணித்தோரை பலமுறை எச்சரித்தும் கேட்காததால் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பேருந்துநிலையம் பகுதிகளில் மாநகர வடக்கு உதவி ஆணையர் நவீன் தலைமையிலான போலிசார் அவர்களை தடுத்து சாலையில் 5 நிமிடம் நாற்காலி போல நிற்க வைத்து பின்னர் அவர்களை கவனித்து அனுப்பி வைத்தனர்.

மாவட்டம் முழுவதும் இதுபோன்று சிலஇடங்களில் இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்களை தடுத்துநிறுத்திய போலிசார் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்து பின்னர் அனுப்பிவைத்தனர். இதன் மூலம் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் பயனிப்போரின் எண்ணிக்கை குறையும் என்பதால் போலீசார் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.ஊரடங்கு உத்தரவு மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2