தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று புதிதாக சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த 5 பேரில், 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், மேலும் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ந்தேதியில் இருந்து 5 பேரையும் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =