கொரோனா தாக்குதல்: பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,100-ஆக அதிகரித்துள்ளது. 4,28,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,09,214 பேர் உலகளவில் குணமடைந்துள்ளனர். இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்கிறது. அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் ஈரானில் 143பேர், இத்தாலியில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சீனாவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு 10க்கும் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலைப்படி இத்தாலியில் 6,820பேர், சீனாவில் 3,281பேர், ஸ்பெயின் நாட்டில் 2,991பேர், ஈரானில் 2,077பேர், பிரான்ஸ் நாட்டில் 1,100பேர், அமெரிக்காவில் 784பேர், பிரிட்டனில் 422 பேர், நெதர்லாந்து நாட்டில் 276பேர், மற்றும் இந்தியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 34 = 43