கொரோனா அச்சம் : திருச்சி மத்திய சிறையில் இருந்து 125 கைதிகள் நிபந்தனைகளுடன் விடுதலை

கொரோனா அச்சத்தால் திருச்சி மத்திய சிறையில் இருந்து 125 கைதிகள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டள்ளனர்.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ பாதிப்பில் இருந்து பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 6 விசாரணை கைதிகள் நேற்று சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில் நேற்று மத்திய சிறையில் இருந்து சொந்த ஜாமீனில் 125 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஆஜராக தவறினால் ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 − 61 =