காசிநகரம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்: வாரணாசி மக்களிடம் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி மக்களுடன் காணோலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது கொரோனாவை எதிர்த்து போராடும் வல்லமையை நாட்டிற்கு தர இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது, கொரோனாவிற்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி அடைய வேண்டும், சமூக இடைவெளிதான் கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே தீர்வாகும் என கூறினார்.

கொரோனாவை சுற்றிவளைத்து தடுப்போம் எனவும் கொரோனா பாதிப்புக்கு எதிரான 21 நாள் போரில் நாம் வெல்வோம், இக்கட்டான இந்த சூழலில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என கூறியவர், நெருக்கடியான சூழலில் நாடு இருக்கும்போது காசிநகரம் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − = 29