ஒத்தி வைக்கப்படும் ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் ஆணையம்

ராஜ்யசபாவில், 55 காலி இடங்களுக்கான தேர்தலில், ஏற்கனவே 37 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்ததநிலையில், ராஜ்யசபா தேர்தலை, 31 ம் தேதிக்குப் பின் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ராஜ்யசபா தேர்தலில், அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க, கூட்டம் கூடாமலிருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால், ராஜ்யசபா தேர்தலை, 31ம் தேதிக்குப் பின் ஆலோசித்து நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ராஜ்யசபா செயலகம், வரும்,27 வரை மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + = 22