இளைஞர்கள் ரத்த தானம் கொடுத்து உதவ வேண்டும்: பினராயி விஜயன்

கேரளத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,460 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில், 467 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளின்றி சாலையோரம் வசிப்போர் பாதுகாப்பாக தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

மாநிலம் முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளை வாடகை எடுத்தவர்களுக்கு இரண்டு மாதம் வாடகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால், அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவுக்குத் தனி மருத்துவமனை அமைக்கப்பட்டு, அனைத்து நோயாளிகளையும் அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும். இளைஞர்களின் உதவி தான் இப்போது மிகவும் தேவைப்படுகிறது என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனைவரும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று, வெளியில் நடமாடாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − 75 =