இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் உரையாற்றுகிறார் பிரதமர்

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 20) அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட அவர், 22ல் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

latest tamil news

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பேச உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − 65 =