அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்:

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. ஆனால் நாம் இப்போது விழிப்புணர்வை பரப்ப வேண்டும். வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டின் போது நாம் தெருவில் இறங்கி போராடினோம். இந்த நேரத்தில் நாம் வீட்டிலிருந்து போராட வேண்டும்.

முதலில் கொரோனா பரவிய சீனாவை விட, இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு காரணம் அவர்கள் அறியாமையால் வெளியே சுற்றியது. அருகில் இருக்கும் நபர்களிடம் இருந்து சுமார் 1 மீ இடைவெளி விட்டு இருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும், 5 நாட்களுக்கு மேல் இருமல் இருந்தால், மருத்துவமனையை அணுக வேண்டும். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே செல்வதை தவிர்த்துவிடுங்கள் என அறிவுருத்தியுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தொற்றானது அனைவருக்கும் பரவும். இது மன்னிக்க முடியாத குற்றம். மருத்துவர்கள் செவிலியர்கள் நமக்காக வெளியே இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் வீட்டின் உள்ளே இருப்போம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை, அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்தான். வரும் முன் காப்போம் என்று பேசி டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − 45 =