ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட உள்ள கபடி: கிரண் ரிஜிஜூ

லோக்சபாவில், கேள்வி நேரத்தின்போது, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், 2,880 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிளான போட்டிகளில், இந்திய இளைஞர்கள் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கத்தில், சிறந்த விளையாட்டு வீரர்களும், குழுக்களும் அடையாளம் காணப்படுவதோடு, உள்நாட்டு விளையாட்டான கபடியை, ஒலிம்பிக் போட்டிக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு முன்னெடுக்கும்.. தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களை அடையாளம் காண்பது மாநில அரசுகளின் கடமை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + = 12