மூடப்படுகிறது திருப்பதி கோயில்: தேவஸ்தானம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வந்த வடஇந்திய பக்தருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில்,கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து பூஜைகளும் நடைபெறும் எனவும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதை, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்கங்கள் அனைத்தும் மூடப்படுவதோடு, திருமலையில் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அளித்து அவர்களை உடனடியாக திருப்பதிக்கு அனுப்பவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 − 68 =