தோனியின் ஃபிட்னஸ் குறித்து பேசிய ரஞ்சி கிரிக்கெட் ஜாம்பவான்…..

தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடர்களில் தோனி விளையாடயிருந்தார். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்துதான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், கொரோனா தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஞ்சி கிரிக்கெட்டின் ஜாம்பவானான வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஸ்டம்புக்கு பின்னால் தோனி நிற்பது அணிக்கு மிகப் பெரிய பலம், மேலும் அவர் கடைசி ஓவர்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது, தோனி நல்ல உடற்தகுதியுடனும் ஃபார்முடன் இருந்தால் அவரை விட வேறு ஒரு வீரரை அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்க தேவையில்லை. மேலும் தோனியை அணியில் சேர்ப்பதன் மூலம் ராகுலின் சுமை குறையும், தேவைப்பட்டால் ரிஷப் பன்ட்டையும் பேட்ஸ்மேனாக சேர்த்துக்கொள்ளலாம் எனத் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6