சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளில், வரும் 22-ம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுவதோடு, அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உள்பட்டவர்கள் வீட்டிலே இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணி ஊழியர்கள் தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள், மத்திய அரசுப்பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர், வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் மற்றும் ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்ற அனைவருக்கும் சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1