முடங்குகிறது சினிமாதுறை: அனைத்து வித படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைக்க முடிவு

வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படங்களில் கற்பனை செய்யப்பட்ட நோய்களை விட தீவிரமாக கொரோனா தாக்கம் இருப்பதால் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் உள்ள அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

36 திரைப்படங்கள் உட்பட 60 சீரியல்கள் படப்பிடிப்பில் உள்ளநிலையில், படப்பிடிப்பு தொடங்குவது குறித்து அடுத்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என செல்வமணி கூறியுள்ளார்.

முன்னதாக, திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மூடவும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − = 12